வாக்காளர் சரிபார்ப்பு பட்டியல்

நீங்கள் வாக்களிக்கத் தயாராக உதவுதல்

வாழ்க்கை பிஸியாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும்! 2022 மார்க்கம் நகராட்சித் தேர்தலில் வாக்களிக்க நீங்கள் தயாராக உள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த, எங்கள் வாக்காளர் சரிபார்ப்புப் பட்டியல் உங்களுக்கு உதவும்.

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து மார்க்கமின் எதிர்காலத்தை உருவாக்குவோம்!

House icon

படி 1: வாக்களிப்பதற்கான உங்கள் தகுதியை உறுதிப்படுத்துங்கள்

  • கனடிய குடிமகன்/குடிமகளாக இருக்க வேண்டும்;
  • குறைந்தது 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்;
  • மார்க்கம் குடியிருப்பாளராக, சொத்து உரிமையாளராக அல்லது குத்தகைதாரராக (அல்லது ஒருவரின் மனைவி/கணவராக) இருக்க வேண்டும்; மற்றும்,
  • வாக்களிக்க பதிவு செய்திருக்க வேண்டும்.
Laptop with magnifying glass icon

படி 2: வாக்களிக்க பதிவு செய்தல்

நகராட்சி வாக்காளர் பட்டியலில் உங்கள் தகவலைச் சரிபார்க்கவும், புதுப்பிக்கவும் அல்லது சேர்க்கவும் (சமீபத்திய தேர்தலில் நீங்கள் வாக்களித்திருந்தாலும் கூட)

Mailbox with envelope icon

படி 3: இந்த இலையுதிர்காலத்தில் அஞ்சலில் உங்கள் வாக்காளர் தகவல் கடிதத்தை எதிர்பாருங்கள்

உங்கள் மொழியில் மாதிரி வாக்காளர் தகவல் கடிதத்தைப் பார்க்கவும்

அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் உங்கள் வாக்காளர் தகவல் கடிதத்தை நீங்கள் பெறவில்லை என்றால், நீங்கள் நகராட்சி வாக்காளர் பட்டியலில் இருக்கிறீர்களா என்பதை மீண்டும் சரிபார்க்கவும்

Calendar icon

படி 4: வாக்களிக்க ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்

உங்களுக்குச் சிறப்பாகச் செயல்படக்கூடிய ஒரு வாக்களிக்கும் விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்:

  • இணையத்தில்
  • காகித வாக்குச்சீட்டில்
  • நேரில் தொடுதிரையில்
  • தேர்தல் மார்க்கம் தேர்தல் அலுவலகம்
Candidate at podium icon

படி 5: யார் பதவிக்கு போட்டியிடுகிறார்கள் என்பதைக் கண்டறியவும்

வேட்பாளர்கள் மற்றும் உள்ளூர் பிரச்சினைகளைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்

X icon

படி 6: அக்டோபர் 14 முதல் 24 வரை உங்கள் உங்கள் வாக்கை அளியுங்கள்

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் - ஜனநாயகத்தில் நீங்கள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறீர்கள்

Chat bubble icon

படி 7: எங்கள் வாக்காளர் அனுபவக் கருத்துக்கணிப்பில் பங்குபெறுங்கள்

எதிர்கால நகராட்சித் தேர்தல்களுக்கான வாக்காளர் அனுபவத்தை மேம்படுத்த எங்களுக்கு உதவுங்கள்

Person speaking into megaphone icon

படி 8: உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை வாக்களிக்க ஊக்குவிக்கவும்

வாக்களிப்பது நமது குடிமைக் கடமை

இந்த இணையதளத்தில் அடிக்குறிப்பில் ஸ்க்ரோல் செய்து ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் Google மொழியாக்கம் கிடைக்கிறது.

Elections Markham
Markham Civic Centre
101 Town Centre Boulevard
Markham, Ontario, L3R 9W3
905.477.7000 x8683 (VOTE)
vote@markham.ca 

Scroll to top